மாணவர்களுக்கு கராத்தே பட்டய சான்றிதழ்
கோவில்பட்டி ஏகே ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் சார்பில் மாணவர்களுக்கு கராத்தே தகுதி பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இலுப்பையூரணி ஏஞ்சல் பிரைமரி நர்சரி பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஏஞ்சல் பள்ளி முதல்வர் பிரசன்னா தலைமை தாங்கினார். ஏகே ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் நிர்வாகி காசி மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
பல்வேறு பள்ளிகளிலிருந்து வருகை தந்த மாணவர்களுக்கு கராத்தேமாஸ்டர் விஜயராஜன் கராத்தே தேர்வுகளை நடத்தினார். கோவில்பட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்களை வழங்கினார்.
திருவள்ளுவர் ஐ.டி.ஐ. ஆசிரியர் வனராஜா,வேல்ஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அனுக்கிரக ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








