எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை முதல் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை களைகட்டியது. தொடர் மழை காரணமாகக் கடந்த 2 வாரங்களாக ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்குச் சுமார் 10 ஆயிரம் ஆடுகள்வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வழக்கமான நாட்டு ரகங்களுடன் ஹைதராபாத் ரக காது ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.
மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலைச்சேரி, ஜம்னாபாரி உள்ளிட்ட வெளிமாநில ஆடு வகை ரகங்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருந்தன. 10 கிலோ எடை கொண்ட நாட்டு ரக ஆடுகள் 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த வாரங்களை விட சற்று விலை அதிகம் தான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது. வளர்ப்பு ஆடுகள் விற்பனை குறைவாகக் காணப்பட்டது, கறிக்காக வாங்கும் மாடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டது. ரூ.,7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளது,







