சமத்துவபொங்கல் விழா; மும்மதத்தினர் பங்கேற்பு
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசியாபார்ம்ஸ் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகாரமேஷ், உதவி ஆளுநர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆசியாபார்ம்ஸ் பாபு அனைவரையும் வரவேற்றார்.
இந்து மகாசபா ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் சர்மா,புனித சூசையப்பர் திருத்தல சார்லஸ்,டவுன் ஜாமியா பள்ளிவாசல் இமாம் முகமதுஅலிபாசில் அன்வாரி ஆகியோர் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலிட்டு சிறப்புரையாற்றினர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம்,சீனிவாசன் , வீராச்சாமி,பாபு,முத்து முருகன்,மாரியப்பன்,கிருஷ்ணசாமி,தாமோதரகண்ணன்,தயாள் சங்கர்,கருப்பசாமி,ஜெகநாதன் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் ரோட்டரி சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.







