பொங்கல் விளையாட்டு போட்டிகள்
கோவில்பட்டி 31வது வார்டு குழுமத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி பொங்கல் தின விளையாட்டு போட்டிகள் புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
இதில் ஓட்டப்பந்தயம் சாக்கு ஓட்டம்,பாட்டிலில் நீர் ஊற்றுதல், ஸ்கிப்பிங், ஓவியம், சிலம்பம், கண்ணை கட்டி பொட்டு வைத்தல், கோலம்,உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 31 வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் பரிசுகளை வழங்கினார். விழாவில் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.








