புனித சூசையப்பர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் திருப்பலி
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் திருப்பலியும் கலை நிகழ்ச்சிகளும்,விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றது.
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் காலை 6 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டு 7 மணிக்கு திருத்தல பங்குத்தந்தை அருட்திரு சார்லஸ் அடிகளார்,உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள் ள்.
பின்னர் இறைமக்கள் அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருத்தல கலையரங்கில் சமத்துவ பொங்கல் பற்றிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
அடுத்ததாக மியூசிக் சேர், கண்ணைகட்டி பானை உடைத்தல்,மற்றும் பல போட்டிகளும், திருமணமான ஆண்களுக்கும் திருமணமாகாத ஆண்களுக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டியும் நடந்தது. இதில் திருமணமாகாத ஆண்கள் வெற்றி பெற்றனர். பின்னர் போட்டிகளில் வெற்ற பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.







