எச். டி. எப். சி. வங்கி ஏ.டி.எம் மையத்தில் எந்திரத்தை கழற்றி பணத்தை திருட முயற்சி – எச்சரிக்கை அலாரம் அடித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம்
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே எச். டி. எப். சி. வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த ஏ.டி.எம் மைய எந்திரத்தினை மர்ம நபர் ஒருவர் கழற்றி பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.

அப்போது ஏ.டி.எம் மையத்தில் எச்சரிக்கை அலாரம் அடித்தது.இதை எதிர்பாராத அந்த மர்ம நபர் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
அலாரம் சத்தம் கேட்டு அந்த பகுதியில் வந்த சிலர் பார்த்தபோது கொள்ளை முயற்சி தெரிய வத்தது.
உடனடியாக போலீசுக்கு தகவல் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
அப்போது ஒரு மர்ம நபர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.







