திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்.இவரது மகன் ராஜபாண்டி (வயது 32 ).இவர் பி சி ஏ படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை, சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டில் இருந்து பணி செய்து இருக்கிறார். இந்த நிலையில் ராஜபாண்டியன் தந்தை பாண்டியனின் சகோதரி அய்யம்மாள் என்பவருக்கும் பாண்டியனுக்கும் பூர்வீக வீட்டடி சொத்து தகராறு கடத்த 7 வருடமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அய்யம்மாள் […]
திண்டுக்கல் – கரூர் சாலையில் பெஸ்கி கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் நேற்று மதியம் எரியோடு கோவிலூர் அடுத்த தோப்புப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் காருக்கு பெட்ரோல் போட வந்தார். முன்பாக வேறுசில வாகனங்கள் நின்றிருந்ததால் அந்த கார் காத்திருந்தது. அப்போது திடீரென காரின் பின்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. உடனே சுதாரித்த பங்க் ஊழியர்கள் வேனை சற்று தூரம் வெளியே நகர்த்தி கொண்டு வந்தனர். டிரைவரும் கீழே இறங்கியநிலையில் […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அ.தி.முக. போட்டி; டி.ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் டி.ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார். தொடர்ந்து , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையை விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சுமார் 50 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.அதில் 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்று வழக்கமாக பட்டாசு ஆலைக்கு சாத்தூர் பகுதியில் உள்ள படந்தால்,அன்பின்நகரம்,சத்திரப்பட்டி பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வந்தனர். காலையில் பணிகள் முடிந்து மதியம் […]
கோவில்பட்டி அஞ்சல் கோட்டம் அஞ்சலக கண்காணிப்பாளர் சு.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளை பெற ஆதார் என் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமம் இன்றி பெறும் வகையில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சலகங்களில் […]
அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் முக்கியமானவையாகும். வருடம் முழுவதும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து, பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்து பித்ருக்களை வழிபாடு செய்தாலே நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டில் தை அமாவாசையானது ஜனவரி 21ஆம் தேதி 2023 அன்று சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 4.25 மணிக்கு தொடங்கி, ஜனவரி 22ஆம் […]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் த.மா.கா.போட்டியா? ஜி.கே.வாசனுடன் முன்னாள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. […]
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர் சங்கத்தின் தமிழ் மாநில கிளை முடிவின்படி சென்னை கூட்டுறவு சொசைட்டி நிர்வாகம் உறுப்பினர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே தர வலியுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய துணைத் தலைவர் எஸ் மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார்.அகில இந்திய பிஎஸ்என்எல் தொலை தொடர்பு ஊழியர் சங்கம் கோவில்பட்டி கிளை தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்., கிளை செயலர் முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், […]
கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட உள்ளது.அதன்படி 8 துணை மின்நிலையமும், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் அதற்கு உட்பட்ட பகுதிகளும் வருமாறு:-கழுகுமலை:- கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி,குருவிகுளம்.கோவில்பட்டி:- கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, லட்சுமிமில் […]
கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் சரியாக செயல்படுகிறதா? ஆட்சியர்
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கக்ப்பட்டு வருகிறது. சமீபத்தில் முதல் அமைச்சர் மு/க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் கீழ் கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சரியாக செயல்படுகிறதா என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு செய்தார் காலையில் கோவில்பட்டி வந்த ஆட்சியர் செந்தில்ராஜ், நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு […]







