தூத்துக்குடி – மதுரை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தூத்துக்குடியில் 1வது கேட், 2வது கேட், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தூத்துக்குடி முதல் மீளவிட்டான் வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.2.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் க.கவுரவ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா […]
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது;- தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுதல், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஒட்டுதல், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை உபயோகித்து வாகனம் ஓட்டுதல், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை ஒலிக்கவிட்டு வாகனம் ஓட்டுதல், தடை செய்யப்பட்ட ஹேண்டில்பார் மாற்றி ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி மாணவ/ மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் புத்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-‘ உலக நாடுகளிலேயே அதிக அளவில் இளம் மக்கள்தொகையை கொண்ட நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் உள்ள மக்களின் சராசரி வயது 29 ஆகும். உலக நாடுகளில் சீனாவில் […]
நெல்லை – திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. திருச்செந்தூர் ரெயிலை பொறுத்தவரை 1904 ஆம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வையும் நடந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு இப்பாதைக்கு நாள் வேலை செய்து பூமி பூஜைகள் செய்யப்பட்டது. பணிகள் முடிந்து 23.2.1923 ம் தேதி, சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை திறக்கப்பட்டது. கடந்த 1923 ஆம் ஆண்டு இதே […]
தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினார்கள். இவர்கள் பிடியில் சிக்கி தப்பிக்க முடியாமல் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர், ஆய்வு மேற்கொண்டார். [தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சார்பில், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மீட்புக் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை எஸ்.கே.பிரபாகர் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் […]
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அவர் அன்றிலிருந்து 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முன்பு வரும் 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேன் மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 4.3 2023 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ள (Weblink) `வெப் லிங்க்’ – ஐ பயன்படுத்தி இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம். தங்கள் பதிவை உறுதி செய்திட Acknowledgement Slip Download செய்யவும். இதன் பிரதியை நகலாகவோ (
தூத்துக்குடியில் துறைமுகம் சார்ந்த போக்குவரத்து வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சங்கர் வானவராயர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் தாமஸ் ஏ.ஆண்டனி வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஜே.டேவிட் ராஜா பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:- ‘ தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







