• May 20, 2024

நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து 100-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

 நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து  100-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நெல்லை – திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. திருச்செந்தூர் ரெயிலை பொறுத்தவரை 1904 ஆம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வையும் நடந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு இப்பாதைக்கு நாள் வேலை செய்து பூமி பூஜைகள் செய்யப்பட்டது. பணிகள் முடிந்து 23.2.1923 ம் தேதி, சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை திறக்கப்பட்டது. 

கடந்த 1923 ஆம் ஆண்டு இதே நாளில் திருநெல்வேலி திருச்செந்தூர் ரெயில் சேவை துவங்கியது. இதன் 100ஆம் ஆண்டு விழாவை செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் பயணிகளும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் திருமலை தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். ஸ்டேஷன் மாஸ்டர் ராஜகோபாலுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. 

செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தினை சுத்தமாக வைத்து கொள்வது, பயணிகள் மூலமாக ரெயில் நிலையத்தினை மேம்படுத்த ஆவண செய்வது உள்பட பல உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் முருகேசன், தென்றல் கட்டுமான பொது தொழிலாளர் நலச்சங்க செயலாளர் அப்துல் ரகுமான், ஜமாத் தலைவர் அலியார், சமூக சேவகர்கள் அப்துல், மாரியப்பன், சண்முகபெருமாள், திருச்செந்தூர் நூலகர் பாலமுருகன், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து முன்னாள் எழுத்தர் அருணாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *