தூத்துக்குடியில் மார்ச் 4- வேலைவாய்ப்பு முகாம்; முன்பதிவு செய்ய `வெப் லிங்க்’ வெளியிட்டார் ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 4.3 2023 அன்று நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ள (Weblink) `வெப் லிங்க்’ – ஐ பயன்படுத்தி இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம்.
தங்கள் பதிவை உறுதி செய்திட Acknowledgement Slip Download செய்யவும். இதன் பிரதியை நகலாகவோ (Xerox) அல்லது Smart Phone- ல் Download செய்ததை காண்பித்தால் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் அன்று கூட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எனவே முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் https://rtionline.tn.gov.in/tut_jobfair23/ என்ற வெப்-லிங்கை பயன்படுத்தி உடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ள்ளார்.
