தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் ஆய்வு
![தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் ஆய்வு](https://tn96news.com/wp-content/uploads/2023/02/f09f2a53-0197-469a-8266-4f375144105d-850x560.jpg)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர், ஆய்வு மேற்கொண்டார்.
[தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சார்பில், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மீட்புக் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை எஸ்.கே.பிரபாகர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளில் பணிபுரிந்து பணியிடைக்காலமான அரசுப் பணியாளர்களின் வாரிசுதாரரர்கள் 4 பேர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)