தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விஜய், முதல்வருக்கான தனிச் செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டார். அதே போல், பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், சிலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும் உத்தரவிட்டு வருகின்றார். இந்த நிலையில், முதல்அமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக அவரது ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விஜய் உடன் பயணிக்கும் இவர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் பதவி […]
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- “அதிமுகவை பொறுத்தவரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா ஆகிய இருவரையும் முன்னிறுத்தியே வாக்கு சேகரித்தோம். நான் அதிமுகவின் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன். எல்லா கட்சிகளைப் போல எங்கள் கட்சியிலும் கருத்து வேறுபாடு உண்டு. அப்படியிருக்கையில், முதலமைச்சர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடாது. தேமுதிக கூறியது போல, குதிரை பேரம் வழிவகுத்திருக்கிறது என்பதை […]
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – தமிழகத்திற்கே மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை முதல் அமைச்சர் ஆக்கலாம் என்ற யாரும் நினைத்து பார்க்காத, சிந்திக்காத ஒரு அரிய வாய்ப்பு. திருமாவை முதல்வர் ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது. திமுக உடன் கூட்டணி முடியாது. திருமாவுக்காக செய்யலாம் என சம்மதித்தோம். திருமாவளவன் முதல்வராக இருக்க, அமைச்சரவையை திமுக, அதிமுக எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை […]
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம், இன்று 13.05.2026 புதன் கிழமை காலை 10 மணிக்குகழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். கூட்டத்தில் கழகப் பொருளார் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் […]
முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது […]
பிளவுபட்ட அதிமுக பிரிவினர் வீட்டுக்கு முதல்-அமைச்சர் சென்றதை மக்கள் விரும்பவில்லை; வெளிநடப்புக்கு முன்
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. நம்பிக்கையின்றி முதல்வர் விஜய் 2 இடங்களில் […]
தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைமுறை தொடங்கியது. உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் நடைமுறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் 3 முறை மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தையும் மூடும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். கதவுகள் மூடப்பட்டதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் […]
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்து, ஆதரவு கடிதம் வழங்கினர். இதையடுத்து அவர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு […]
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விரைவில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இறக்குமதிக்கா இந்தியா அந்நிய செலவாணி செலவிடும் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், […]
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு என 2 தரப்பாக பிளவு பட்டுள்ளது. இதில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி…. வேலுமணி தரப்பில் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்றார்.. அவரை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று வரவேற்றனர்…. இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யை […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







