கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள கோவிலில் கொடை விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கோவில்பட்டி வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரவேல் மகன் வெங்கடேஷ் (21), கருப்பசாமி மகன் மாரிகண்ணன் (21) , சோலையப்பன் மகன் முத்துகுமார் (20) ஆகிய 3 பேரும் கோவில் திருவிழாவிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.இதனையடுத்து கோவில் தர்மகத்தா இசக்கிமுத்து (37), அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்து […]
கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவேண்டும்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ், கோவில்பட்டி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் கல்லூரி கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் 9 துறைகளும், முதுகலை பாடப்பிரிவுகள் 5 துறைகளும் உள்ளன. கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை மற்றும் எட்டையபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1800 […]
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.இப்பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் கலெக்டர் செந்தில்ராஜ்,மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுநல தொண்டு நிறுவனங்கள், சைக்கிள் ஓட்டும் சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள், பல்வேறு நிலையிலான பெரு வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ் சாலையில் அமைந்துள்ள […]
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு உள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.பின்னர் பழைய பஸ் நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்நிகழ்ச்சிகளில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் […]
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன்.3-ந்தேதி (இன்று) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை […]
பிரபல பின்னணி பாடகர் கே.கே. என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 53 வயதான பாடகர் கே.கே., கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.அதனை தொடர்ந்து, அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின்படி, கிட்டத்தட்ட மூன்று மணி நேர மேடை நிகழ்ச்சிக்குப் […]
அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் பயிற்சி சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில்,முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான பொன்னையன் பேசியதாவது:-அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க. இருந்தாலும், அதன் வளர்ச்சி அ.தி.மு.க., தமிழகம் மற்றும் திராவிடக் கொள்கைகளுக்கு நல்லதல்ல.தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது. காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக பா.ஜ.க., தமிழ்நாட்டுக்கு தண்ணீர் […]
.அதி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.அ.தி.முக.. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் கொல்லம்பரம்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கலையரங்கம் கட்டப்படுகிறது. இந்த கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தார். மேலும் அந்த பகுதியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் மக்களை சந்தித்து பேசினார். அப்போது மரங்கள் வளர்ப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் […]
கோவில்பட்டி எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கனரா வங்கி சுழற்கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. போட்டி 4-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.ஆண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ.17.017, இரண்டாம் பரிசாக ரூ. 13,017, மூன்றாம் பரிசாக ரூ.9017, நான்காம் பரிசாக ரூ. 6017 வழங்கப்படுகிறதபெண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ12,017, இரண்டாம் பரிசாக ரூ. 9017, மூன்றாம் பரிசாக ரூ.7017, நான்காம் பரிசாக ரூ.5017 […]







