தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
![தூத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/ef9c5eb1-b87b-45e4-bda2-46e4b3a50056-850x560.jpg)
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு உள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.
பின்னர் பழைய பஸ் நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்
நிகழ்ச்சிகளில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)