தூத்துக்குடியில் சைக்கிள் தினம் பேரணியில் கலெக்டர் பங்கேற்பு
![தூத்துக்குடியில் சைக்கிள் தினம் பேரணியில் கலெக்டர் பங்கேற்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/06/IMG-20220603-WA0058-960x432-1-850x432.jpg)
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.
இப்பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் கலெக்டர் செந்தில்ராஜ்,மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுநல தொண்டு நிறுவனங்கள், சைக்கிள் ஓட்டும் சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள், பல்வேறு நிலையிலான பெரு வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/06/IMG-20220603-WA0056-1024x461-1.jpg)
தமிழ் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். பூங்காவில் தொடங்கிய சைக்கிள் பேரணி, மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் தந்தி ஆபீஸ் வழியாக மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் (மாநகராட்சி பழைய அலுவலகம்) சென்று நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியருக்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தண்ணீர் மற்றும் ஜூஸ் வழங்கினார். மேலும், அருகில் உள்ள கடைகளில் மாநகராட்சி சார்பில் குப்பைகளை பிரித்து கொடுப்போம் நம் நகரின் தூய்மை நம் ஒவ்வொருவரின் கடமை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)