கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவேண்டும்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

 கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கவேண்டும்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ், கோவில்பட்டி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் கல்லூரி கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் 9 துறைகளும், முதுகலை பாடப்பிரிவுகள் 5 துறைகளும் உள்ளன. கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை மற்றும் எட்டையபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
கல்லூரியில் அனைத்து துறைகளிலும் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களிடம் இருந்து பெற்றோர் ஆசிரியர் கழகம் நிதி என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலித்து தற்காலிகமாக பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகமே நியமனம் செய்கிறது.
எனவே தமிழ்நாடு அரசு கல்லூரிக்கு தேவையான நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் கல்லூரி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்.
கல்லூரியில் பாலியல் புகார் குழு மற்றும் புகார் பெட்டி அமைத்திட வேண்டும். கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கல்லூரியில் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே உடனடியாக உதவித்தொகை கிடைக்கப் பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்பட்டி பஸ் து நிலையத்திலிருந்து கல்லூரி வரை இலவச அரசு பஸ்கள் இயக்கிட வேண்டும். கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்திட வேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *