கோவில் விழாவில் டியூப் லைட்டுகளை உடைத்து தகராறு செய்த 3 பேர் கைது
![கோவில் விழாவில் டியூப் லைட்டுகளை உடைத்து தகராறு செய்த 3 பேர் கைது](https://tn96news.com/wp-content/uploads/2022/06/IMG-20220602-WA0008-850x560.jpg)
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள கோவிலில் கொடை விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கோவில்பட்டி வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரவேல் மகன் வெங்கடேஷ் (21), கருப்பசாமி மகன் மாரிகண்ணன் (21) , சோலையப்பன் மகன் முத்துகுமார் (20) ஆகிய 3 பேரும் கோவில் திருவிழாவிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.
இதனையடுத்து கோவில் தர்மகத்தா இசக்கிமுத்து (37), அவர்களை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன், கோவிலில் கட்டியிருந்த டியூப் லைட்டுகளையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிகண்ணன் வழக்குபதிவு செய்து வெங்கடேஷ், மாரிகண்ணன் , முத்துகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)