உலக கராத்தே ; தங்கப்பதக்கம் வென்ற ஓட்டப்பிடாரம் மகேசுக்கு பாராட்டு
உலக கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: ஓட்டப்பிடாரம் மகேசுக்கு பாராட்டு
மலேசியாவில் நடைபெற்ற 6 வயதுக்கு மேற்பட்டோருக்கான 18வது உலக கராத்தே போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் 21 பிரிவுகளில் போட்டியிட்டு 12 தங்க பதக்கங்களையும், தலா 5 வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தினர். இந்தநிலையில் தமிழகம் திரும்பிய அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாணவ, மாணவியர் கராத்தே போட்டியில் சாதித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தங்கபதக்கம் பெற்றவர்களில் ஒருவர் ஆர்.மகேஷ். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தாலுகா கக்கரம்பட்டி அருகேயுள்ள மேலமீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்.
தங்கபதக்கம் பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மகேசுக்கு குறுக்குச் சாலை சந்திப்பில் ஒட்டபிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சால்வை போர்த்தியும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். ஊர் பொதுமக்கள் அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.