99-வது பிறந்தநாள்: கருணாநிதியின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

 99-வது பிறந்தநாள்: கருணாநிதியின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன்.3-ந்தேதி (இன்று) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், 3 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் கலைஞரின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *