தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் எல்.கே.ஜி. , யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி. , யூ.கே.ஜி. வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.=இதற்கு மாற்றாக மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தொடக்க […]
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள், தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக ஏறக்குறைய 5,000-க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டனரஅவர்களில் 2,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடந்த ஆண்டு மே […]
தமிழக அரசின் வழிகாட்டலின் படி, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக “எனது குப்பைகள், எனது பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மந்திரி தலைமையில் மாணவ-மாணவியருக்கு, ஓவியம் வரைதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் வாசகம் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, […]
மறைந்த இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா மகன் நவுஷாத் அலி துபாய் சென்றார். அவருக்கு அங்குள்ள பொன்னுசாமி உணவகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மதுமஹ்ரூப் தலைமை தாங்கினார். அவர் நவுஷாத் அலிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்பு சுல்தான்என்ற நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. கல்லிடைக்குறிச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நாகூர் இ.எம். ஹனிபாவின் சமூக நல்லிணக்கப் […]
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவன கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த் சோதனை நடந்து வருகிறது, 25 கிளைகளுக்கும் தனித்தனி குழுவினர் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.கோவில்பட்டியில் பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவன உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 6௦). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மா பட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமாகோமதி(52). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு டயாலிசிஸ் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த […]
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை ரூ.4.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், வந்து செல்ல கேளரி போன்ற இருக்கைகள், அழகிய முத்துபோன்ற சிலைகள், செல்பி பிரியர்களை கவர்வதற்காக ஐ லவ் டூடி என்ற எழுத்து கொண்ட கண்களை கவரும் அழகான விளக்குகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், ஊஞ்சல் மற்றும் மாற்றுதிறனாளிகள் சருக்கு மூலம் வீல் சேரில் சென்று கடலில் நீராடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்த அழகிய பூங்காக் திறப்பு விழா நடைபெற்றது. இதனை […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் பெட்ரிக்ராஜன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். ‘அப்போது கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள ஒரு ஸ்டோரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சம்பந்தமாக சோதனை செய்த போது அந்த கடைமுன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது, 1986 ‘விக்ரம்’. இப்போது வந்திருக்கும் புதிய ‘விக்ரம்’ போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டது.விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார். பகத் பாசில், நரேன் […]
தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தீஸ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.தென்பாகம் ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்த மோகன் மகன் ஆனந்தகுமார் (32), ராஜேந்திரன் மகன் சார்லஸ் (32) தூத்துக்குடி மேல […]







