குடும்பத்துடன் விஷம் குடித்தார்: மனைவியை தொடர்ந்து கணவரும் பலி
![குடும்பத்துடன் விஷம் குடித்தார்: மனைவியை தொடர்ந்து கணவரும் பலி](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download-1-7.jpg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 6௦). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மா பட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமாகோமதி(52). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரத்தில் வசித்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு டயாலிசிஸ் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துராமலிங்கம் தனது மனைவி மற்றும் மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்,
அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த ஒட்டன்சத்திரம் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது முத்துரமாலிங்கம், உமாகோமதி, சிவா பிரபாகரன் ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உமா கோமதி இறந்து போனார்.
முத்துராமலிங்கம் மற்றும் அவரது மகன் சிவபிரபாகரன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த முத்துராமலிங்கம் உடல்நிலையில் நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் இறந்து போனார். சிவ பிரபாகரன் தொடர் சிகிச்சையில் உள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)