தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை புதுப்பிப்பு; மாற்றுதிறனாளிகள் நீராட சிறப்பு ஏற்பாடு

 தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை புதுப்பிப்பு; மாற்றுதிறனாளிகள் நீராட சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை ரூ.4.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், வந்து செல்ல கேளரி போன்ற இருக்கைகள், அழகிய முத்துபோன்ற சிலைகள், செல்பி பிரியர்களை கவர்வதற்காக ஐ லவ் டூடி என்ற எழுத்து கொண்ட கண்களை கவரும் அழகான விளக்குகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், ஊஞ்சல் மற்றும் மாற்றுதிறனாளிகள் சருக்கு மூலம் வீல் சேரில் சென்று கடலில் நீராடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அழகிய பூங்காக் திறப்பு விழா நடைபெற்றது. இதனை கனிமொழி எம்.பி.திருந்து வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர் எடின்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்.பி. பேசும்போது, ’’மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான மற்றவர்களை போல் தாங்களும் கடலில் கால் நனைத்து நீராட வேண்டும் என்ற கோரிக்கையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
அவர்களின் மகிழ்ச்சியை கண்டோம் இன்னும்10 வருடம் கடந்தாலும் இன்று இருப்பதை போல் சுத்தமாகவும் நல்ல முறையில் பொதுமக்கள் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் இளம்பெண்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்’’ என்றார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, ’’அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பதை காணமுடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனைவருடைய ஓத்துழைப்பு இருக்க வேண்டும்’’ என்றார்.
கலெக்டர் செந்தில்ராஜ், ’’சென்னைக்கு அடுத்தபடியாக இது போன்ற கட்டமைப்புகள் உள்ள இடமாக தூத்துக்குடி கடற்கரை இருக்கிறது. பசுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருகோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன மக்கும் குப்பை மக்காத குப்பை என்பதை தரம் பிரித்து கொடுத்து அனைவரும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும்’’ என்று கேட்டுகொண்டார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் , ’’மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு மாநகரம் முழுவதும் புதுப்பொலிவுடன் விரைவில் முழுமைபெறவுள்ளது. பொதுமக்களும் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *