நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 250 பேர்களில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது. அதாவது, தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் , அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் பதவிக்காலம் முடிகிறது,.இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க […]
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சென்னை கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் அறந்தாங்கி ஏ. நூர் முஹம்மது. துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். துபாயில் அவருக்கு முன்னாள்மாணவர் சங்க அமீரக கிளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமீரக கிளையின் தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன்எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் எழுதிய ‘வாழ்க்கையில் வெற்றி’ என்ற தன்னம்பிக்கைநூலை அன்பளிப்பாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருச்சி ஜாபர் சித்தீக், பொதுச் செயலாளர்திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஊடகவியாளர் […]
திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் திருச்செந்தூர் காந்திபுரம் விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டnar.அப்போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவரான வெற்றிவேல் (35) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 4½ யூனிட் சரள் மணல் மற்றும் […]
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படுகிறது.அதன்படி 2020 – 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வருபவர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை முதல் மற்றும் […]
ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உள்பட 41 படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 6 படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. மற்ற படங்கள் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. `விக்ரம் படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்துள்ளார். ஜூன் 3 ந்தேதி இந்த படம் வெளியாகிறது. ஜூன் 6 ந்தேதி கலையரசன்-ஆனந்தி நடித்துள்ளடைட்டானிக் -காதலும் கவுந்து போகும்’ என்ற படம் வெளியாகிறது இந்த படத்தை ஜானகிராம் டைரக்டு செய்துள்ளார். […]
தென்காசி மாவட்டம் சொக்கநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 45). ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இவருக்கும், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவருக்கும் வியாபாரம் தொடர்பாக நட்பு ஏற்பட்டது. இதனால் ஜெயபால் ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு செல்லும்போது, அந்த நண்பரின் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதன் காரணமாக அந்த சிறுமி தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள்.அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு […]
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் போலீசாருக்கு நேற்று இரவு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சாத்தூர் போலீசார், சாத்தூர்- கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை விரட்டி சென்றனர். அந்த லாரியை பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.லாரியை விரட்டி சென்ற போலீசார் சோதனை செய்த போது லாரியில் […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமுடிமன் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகன் கார்த்திக் (வயது 22) ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மாலினி என்ற மனைவியும், மகிஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர். இவரது அண்ணன் செல்வகுமார் (24). ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சாத்தூர் அமீர்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கார்த்திக் தனது தாயாரிடம் 3.5 பவுன் நகையும் ரூ.1.5௦ லட்சமும் வாங்கினாராம். இதையறிந்த […]
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வார் மாலையம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 13-ம் தேதி நாட்டுகால் நடுதலுடன் தொடங்கியது,அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு முன்புறம் சாலையின் ஒரு பகுதியில் அடுப்பு பற்ற வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.சுவாமி -அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து […]
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வைகாசி திருவிழா இன்று (மே27) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வழி பக்தர்கள் அய்யா ” சிவ சிவ அரகரா அரகரா ” என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால லோகாதிபதி, […]







