மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் கிரிராஜன் உள்பட 3 பேரும் வேட்பு மனு தாக்கல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 250 பேர்களில் தமிழகத்தை சேர்ந்த 18 பேர் அடங்குவர். இவர்களில், 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி முடிவடைகிறது. அதாவது, தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் , அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் பதவிக்காலம் முடிகிறது,.
இதேபோல், மேலும் 14 மாநிலங்களை சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிகிறது. எனவே, மொத்தம் உள்ள 57 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்க இருக்கிறது.
தமிழகத்தில் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 31-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி எண்ணிக்கை குறைந்ததால் தற்போது 2 உருப்பினர்கள மட்டுமே தேர்வு செய்யமுடியும். திமுகவுக்கு 4 உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம், தில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்ற 3 பேரின் பெயர்களை அறிவித்து விட்டார்.
அவர்களில் இரா.கிரிராஜன் . கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலரும் சட்டசபை செயலாளருமான கே.சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் எ.வ,வேலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.
வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3-ந்தேதி ஆகும். காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தால், இந்த தேர்தலில் போட்டி இருக்காது.
கூடுதலாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தால், ஜூன் 10-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.