திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிக்கு துபாயில் வரவேற்பு

 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிக்கு துபாயில் வரவேற்பு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சென்னை கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் அறந்தாங்கி ஏ. நூர் முஹம்மது. துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். துபாயில் அவருக்கு முன்னாள்
மாணவர் சங்க அமீரக கிளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமீரக கிளையின் தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன்
எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் எழுதிய ‘வாழ்க்கையில் வெற்றி’ என்ற தன்னம்பிக்கை
நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருச்சி ஜாபர் சித்தீக், பொதுச் செயலாளர்
திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஊடகவியாளர் முதுவை ஹிதாயத்,
கடலூர் கமால் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது அமீரகம் மற்றும் சென்னை கிளைகளில் நடந்து வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *