ஜூன் மாதம் கமலின் `விக்ரம்’ உள்பட 41 படங்கள் வெளியாகின்றன
ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உள்பட 41 படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 6 படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. மற்ற படங்கள் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
`விக்ரம் படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்துள்ளார். ஜூன் 3 ந்தேதி இந்த படம் வெளியாகிறது.
ஜூன் 6 ந்தேதி கலையரசன்-ஆனந்தி நடித்துள்ள
டைட்டானிக் -காதலும் கவுந்து போகும்’ என்ற படம் வெளியாகிறது இந்த படத்தை ஜானகிராம் டைரக்டு செய்துள்ளார்.
ஜூன் 17 அன்று ஆர்,ஜே.பாலாஜி-அபர்ணா முரளி நடித்துள்ள வீட்ல விசேஷம்' வெளியாகிறது, இந்த படத்தை கதாநாயகன் ஆர்,ஜே.பாலாஜியே டைரக்டு செய்து இருக்கிறார்.
ஜூன் 17 அன்று அருண்விஜய் நடித்துள்ள யானை படமும் வெளியாகிறது. இந்த படத்தின் நாயகி பிரியா பவானி ஷங்கர். டைரக்டர் ஹரி.
ஜூன் 26ந்தேதி வினோத் கேசவன் நடித்துள்ள
ஐஸ்வர்யா முருகன்’ படம் வெளியாகிறது, இந்த படத்தை ஆர்,பன்னீர்செல்வம் டைரக்டு செய்திருக்கிறார்.
ஜூன் 26 அன்று விஜய் ஆண்டனி-ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் வெளியாகிறது, இந்த படத்தின் டைரக்டர் பாபு யோகேஸ்வரன்.
மேற்கண்ட 6 படங்கள் தவிர தேதி அறிவிக்கப்படாத நிலையில் விஜய் சேதுபதி-விஷ்ணு விஷால் நடித்துள்ளா இடம் பொருள் ஏவல்',விஜய் கார்த்திக் நடித்துள்ள
அராத்து’, விக்னேஷ் கார்த்தி, நாசர் நடித்துள்ள குற்றம் நடந்தது என்ன',மீனாட்சி, பாண்டியராஜன் நடித்துள்ள
நேர்முகம்’, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வெர்ஜின் மாப்ள', ஹரிகிருஷன் பாஸ்கர்-அம்ரிதா நடித்துள்ள
பேய்ப்பசி’, அருண் விஜய்-ரித்திகா நடித்த பாக்ஸர்', அஷ்வின் கக்குமனு- ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள
இது வேதாளம் சொல்லும் கதை', விஜய் ஆண்டனி, ஜெய் நடித்துள்ள காக்கி', ஆர்.எஸ்.கார்த்திக்-அய்ரா நடித்தசைரன்',
நதி’. கணேஷ் வெங்கட்ராமன்-பார்வதி நாயர் நடிக்கும்
சிபிராஜ்-தான்யா நடித்துள்ள மாயோன்'. சாம் ஜோன்ஸ்-ஆனந்தி நடித்துள்ளஉன்பார்வையில்', மஹத் ராகவேந்திரா-யாஷிகா ஆனந்த் நடித்த
இவன் தான் உத்தமன்’,சசிகுமார் நடித்த பரமகுரு', எஸ்.என்; இயக்கும்மேடை' தங்கர் பச்சானின் டக்கு முக்கு டிக்கு தாளம்', விதார்த் நடித்துள்ளநட்சத்ரா', விஜய் சேதுபதி-,மெகா ஆகாஷ் நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஸ்ரீகாந்த் -வித்யா பிரதீப் நடித்துள்ள எக்கோ', அருண்விஜய்-பாலக்லால் வாணி நடித்துள்ள சினம்' ,எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளபொம்மை', ஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் எண்ணித்துணிக' சத்யராஜ்-விஜய் சேதுபதி நடிக்கும்சூது கவ்வும் 2', கதிர் நடிக்கும் யூகி', தனுஷ் நடிக்கும் டி 46', அமலாபால்-அதுல்யா ரவி நடிக்கும்
‘கடவர்’, ஆதவ் கண்ணதாசன்-வாணி போஜன் நடிக்கும் 'தாழ் திறவா', ஸ்வாகத் எஸ்.கிருஷ்ணனின்
‘காயல்’, விமல்-மிஸா நரங் நடிக்கும் ”வெற்றி கொண்டான்', காஜல் அகர்வால் -ரெஜினா நடித்துள்ள 'கருங்காப்பியம்' நரேன், பாலசரவணன் நடிக்கு
ம் `குரல்’, சந்தானம்-அதுல்ய சந்திரா நடிக்கும் ‘குழு குழு', சேரனின்
‘தமிழ்க்குடிமகன்’, மானஸ்வி கொட்டாச்சி நடிக்கும் `கண்மணி பாப்பா’ ஆகிய 35 படங்களும் ஜூன் மாதம் வெளியாகின்றன. ஆக மொத்தம் ஜூன் மாதத்தில் மட்டும் 41 படங்கள் வெளியாக உள்ளன.