ஆடு வியாபாரி `போக்சோ’ வில் கைது
தென்காசி மாவட்டம் சொக்கநாதன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 45). ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவருக்கும் வியாபாரம் தொடர்பாக நட்பு ஏற்பட்டது. இதனால் ஜெயபால் ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு செல்லும்போது, அந்த நண்பரின் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதன் காரணமாக அந்த சிறுமி தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தாள்.அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயபாலை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.