சாத்தூர் அருகே லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் போலீசாருக்கு நேற்று இரவு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சாத்தூர் போலீசார், சாத்தூர்- கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை விரட்டி சென்றனர். அந்த லாரியை பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
லாரியை விரட்டி சென்ற போலீசார் சோதனை செய்த போது லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு எகொண்டு சென்றனர். அந்த அலாரியில் சுமார் 300 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. இதன் எடை சுமார் 15 டன் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் உணவு கடத்தல் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் கிளீனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.