காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை
![காவல்துறையினரின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை](https://tn96news.com/wp-content/uploads/2022/05/2836199a-5c0a-4bae-ac5c-4f42308b496f.jpg)
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படுகிறது.
அதன்படி 2020 – 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வருபவர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை முதல் மற்றும் இரண்டாவது தவணையாக இன்று (27.5.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கினார்.
இந்த கல்வி உதவி தவணைத் தொகை தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் சிறப்பு உதவி ஆய்வாளர் லெட்சுமணன் மகள் முத்து சுபத்ரா, சிறப்பு உதவி ஆய்வாளர் அமீர்த எபனேசர் மகள் அருணா, தலைமைக் காவலர் வெள்ளாரி புருஷோ சேவியர் மகன் அவினாஷ் மற்றும் பெண் தலைமை காவலர் இசக்கியம்மாள் மகள் ஹேமலதா ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கி, அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை அமைச்சுப்பணி உதவியாளர் அனிதா கிருஷ்ணகுமாரி, தகவல் பதிவு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)