• April 19, 2025

கோவில்பட்டி மாலையம்மன் கோவில் பொங்கல் விழாவில் திருக்கல்யாணம்

 கோவில்பட்டி மாலையம்மன் கோவில் பொங்கல் விழாவில் திருக்கல்யாணம்

கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வார் மாலையம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 13-ம் தேதி நாட்டுகால் நடுதலுடன் தொடங்கியது,
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு முன்புறம் சாலையின் ஒரு பகுதியில் அடுப்பு பற்ற வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
சுவாமி -அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர். பின்னர் கல்யாண விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டது, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு மதிய விருந்தை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், துணை நகர செயலாளர் மாதவராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, வணிக வைசிய சங்க தலைவர் வி.எஸ்.எஸ் வெங்கடேஷ், முன்னாள் துணைச் சேர்மன் ரத்தினவேல், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், கிளைச் செயலாளர் பொன்ராஜ், நகரமன்ற உறுப்பினர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.பி.ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *