• May 17, 2024

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோவில் வைகாசி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

 சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி கோவில் வைகாசி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வைகாசி திருவிழா இன்று (மே27) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வழி பக்தர்கள் அய்யா ” சிவ சிவ அரகரா அரகரா ” என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால லோகாதிபதி, மகன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி, நெல்லை,தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் . தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. ஜூன் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை எட்டாம் நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
9-ம் நாள் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டம் ஜூன் 6- ம் தேதி திங்கட்கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும், மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மூன்று வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை மூலம் அய்யாவழி பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *