கோவில்பட்டி கோ வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறையின் சார்பில், “தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் எழுத்துத்திறன் மேம்பாட்டின் மூலம் மாணவர்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒருநாள் ஊக்குவிப்பு நிகழ்ச்சி கல்லூரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ப.மகேந்திரன் ஒத்துழைப்போடு, கல்லூரி முதல்வர் பாண்டியராணி தலைமை தாங்கினார். கல்லூரி சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநர் மப.மகேஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் இந்து நாடார்கள் செந்தில்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் […]
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 35 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அத்துடன், எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, ரூ.3.23 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு; மாநில […]
மதிமுக எம்.பி,. துரை வைகோ.வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ் அழைப்பின் பேரில், இன்று (25.6.2026) காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை சுமார் இரண்டு மணி நேரம், மக்களின் நலன் கருதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று முக்கிய இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டேன். முதலாவதாக கோவில்பட்டியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனையை விரிவாகப் பார்வையிட்டேன். 413 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் கூடுதல் […]
கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட காளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா 27.06.2026 காலை 8.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் நடைபெற இருக்கிறது. பக்தப் பெருமக்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு காட்சி கொடுத்த காளியம்மனைத் தரிசித்துப் பேரானந்தப் பெருவாழ்வு பெற கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். சனிக்கிழமை காலை 7. மணிக்கு மேல் காலை 8.30 மணிக்கு மேல் 9. மணிக்குள் காலை 10.30 மணிக்கு மேல் : சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், […]
கோவில்பட்டி நகரில் முக்கிய சாலைகளில் நாள்தோறும் பெருகி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி மூன்று நாட்கள் நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த பணி தொடங்கியது நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. நேற்று மெயின் ரோட்டில் இந்த பணி நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை பசுவந்தனைச் சாலைகள் ஆக்கிரமப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் போடப்பட்டிருந்த மேல் […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பில் “GSTR 3B வரி அறிக்கை தாக்கல், GST விதிமுறைகள், நடைமுறை விளக்கங்கள் மற்றும் இணக்கப்பாடு” என்ற தலைப்பில் ஒருநாள் செயல்முறை பயிற்சி கல்லூரி கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் இந்து நாடார்கள் செந்தில்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் சுயநிதிப் பாடப்பிரிவு துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான செல்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு GSTR 3B வரி அறிக்கை […]
கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகரை சேர்ந்தவர் அன்பழகன்(66), இவரது மனைவி சாந்தி (58), அதே பகுதியைச் சேர்ந்த சுபா(32) மற்றும் ஜெயந்தி (40) ஆகியோர் காரில் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பினர். காரை அன்பழகன் ஓட்டி வந்துள்ளார். கோவில்பட்டி அருகே புளியங்குளம் விலக்கு பகுதியில் கார் வந்தபோது அய்யனேரியிலிருந்து புளியங்குளத்திற்கு நாடார் நடுநிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையைக் கடக்கும் போது கார் […]
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஒன்றரை வருடங்களாக எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. சட்டமன்றத் தேர்தலில் கூட இருவரும் தனித்தனி அணிகளாகப் பிரிந்தே செயல்பட்டனர். அன்புமணி அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிக்க, ராமதாஸோ சசிகலாவுடன் கைகோர்த்தார். இதனால் கட்சிச் சின்னம் அன்புமணியின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதுடன், பாமக […]
கேரள மாநிலத்தின் கல்வியாளர் மற்றும் நூலக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பி. என். பணிக்கர் நினைவாகஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை தேசிய வாசிப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி நூலகத் துறையின் வாசகர் மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை மாணவி காயத்ரி வரவேற்று பேசினார் . கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.முதல்வர் முனைவர் ஆர். […]
கோவில்பட்டி மத்திய நகர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. 3242 கூட்டு மாவட்டத்தின் முன்னாள் தலைவர் லயன் பிரகாஷ் நிர்வாகிகளைப் பதவியில் அமர்த்தினார். தலைவராக சரவணக்குமார், செயலாளராக திருமலைக்குமார், பொருளாளராக பழனிமாரியப்பன் ,கிளப் அட்மினாக இராமச்சந்திரன் பொறுப்பேற்றனர். வட்டாரத் தலைவர் வெங்கடேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் ராஜ்குமார், வட்டாரத் தலைவர் கண்ணன், தூத்துக்குடி மாவட்ட கேபினட் அட்மின் ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கல்வி, மருத்துவம், குடும்ப நல உதவியாக 15 […]







