திருநெல்வேலி அருகே வடுகம்பட்டியில் உள்ள தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாகத் தீயணைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காகித ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம் சுட்டெரித்த வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக, ஆலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகித பண்டல்களில் […]
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதல்-அமைச்சர் விஜய்யும் உள்ளனர். மதியம் 1.30 மணி வரை தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது . இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார […]
தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மாநாட்டு விளம்பர பேனரை மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அகற்றியது. இதனைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் வழிவிடுமாறு வாக்குவாதம் செய்தார். இளைஞருக்கும் கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டார். அப்போது ஆகாஷ் போலீசாருடன் […]
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் மற்றும் பிரதான மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தனியார் உணவு விடுதி ஒன்று விதிமுறைகளுக்கு முரணாக, இயந்திரக் குழியுடன் அமைக்கப்பட்டிருந்த பிரதான மழைநீர் வடிகாலில் சமையல் மற்றும் உணவுக் கழிவுகளை நேரடியாக கலந்தது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சுமார் 100 […]
மதுரை மாவட்டம் சேடபட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). பி.காம் பட்டதாரி. கடந்த 2015-ம் ஆண்டில் இவரும், அதே பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (வயது 21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலேயே இரு குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த பாண்டீஸ்வரிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் பாண்டீஸ்வரி தன் பெற்றோர் வீட்டில் […]
திமுக ஆட்சியில் கடந்த 2024-ம் ஆண்டு அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. 2024 செப்., 2ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த எ.வ.வேலு அதனை திறந்து வைத்தார். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை, பெஞ்சல் புயல் காரணமாக […]
தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார். இதேபோன்று, மருத்துவ காப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார். இந்நிலையில் அ.தி.மு.க.வினர், கோரிய கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்காததால் அவையில் இருந்து […]
3 துறைகளின் கோப்புகளை ஓபன் செய்ய வச்சிராதீங்க; திமுகவுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில் அளித்தார். இதற்கிடையில் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். அப்போது சட்டென்று எழுந்து முதல்-அமைச்சர் […]
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார்; சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் கடந்த 12-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசினார். அப்போது அவர், நான் 280 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இங்கு வருகிறேன். அதற்கு பயணப்படி கொடுக்கிறீர்கள்… ஆனால் எனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. வாடகைக்குதான் எடுக்க வேண்டியதுள்ளது .. எனது தொகுதியில் 40 கிலோமீட்டர் சுற்றளவு பயணித்து மக்களை சந்தித்து பணிகளை மேற்கொள்வதற்கான வாகன வசதிகள் இல்லை…. ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, அவருக்கு ஊதியம் கொடுக்கும் அளவுக்கு […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “நூலக விழா” கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லுதல், நினைவாற்றல் சோதித்தல் போட்டி, புத்தக பக்க அடையாளக் குறியீடு உருவாக்குதல், சைகை விளையாட்டு, புத்தக விமர்சனம், புத்தக அட்டை வடிவமைத்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் முடிவடைந்து இன்று 18ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற்றது. நூலக ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை உதவி பேராசிரியருமான ரா.கவிதாமஞ்சு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அ.பாண்டியராணி விழாவிற்கு தலைமை […]







