தி.மு.க.தலைவர் பதவிக்கு போட்டியிட மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்
தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது
.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க.தலைவர் பதவிக்கு போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி,சேகர் பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்,







