போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சி.சி. மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவுரவ தலைவர் பிச்சையா தலைமை தாங்கினார், செயலாளர் துரைராஜ், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பொருளாளர் ராமன் வரவேற்று பேசினார்,

தலைவர் ராமச்சந்திரன் சங்க வளர்ச்சி பற்றி பேசினார், சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் தொடர்பாகவும், மற்றும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன, துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்ட இறுதியில் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
