‘வெந்து தணிந்தது காடு’ எப்படி இருக்கு? கோவில்பட்டி ரசிகர்கள் கருத்து
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக, சிம்பு – கவுதம் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து ஒன்றாக பணிபுரிந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. ஆகையால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத்து உள்ளன.
இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சித்தி இதானி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். இந்நிலையில் இன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர
‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை திரையிடப்பட்டது. அப்போது, கோவில்பட்டி சண்முகா தியேட்டர் வாசலில் குவிந்த சிம்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் முடிந்து வந்தவர்களிடம் ‘வெந்து தணிந்தது காடு’ எப்படி இருந்தது என்பது பற்றி கோவில்பட்டி டாக்கீஸ் சுரேஷ் கருத்து கேட்கும் காணொளியை கீழே பார்க்கலாம்……







