114-வது பிறந்தநாள்: அண்ணா சிலைக்கு கனிமொழி, அமைச்சர் மாலை அணிவிப்பு
பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள காய்கனி மார்க்கெட் சிக்னல் அருகே உள்ள
அண்ணாவின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றத
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செலயாளர் ஆறுமுகபெருமாள், செந்தூர்மணி, இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம். விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.