கோவில்பட்டியில் வீர சாவர்க்கர் பெயரில் திடீர் தெரு
கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தெருவுக்கு இன்று வீர சாவர்க்கர் தெரு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் தெருவின் ஒரு கட்டிட சுவரில் நகராட்சி என்று குறிப்பிட்டு வீரசாவர்க்கர் தெரு என்று எழுதி பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.
சுதந்திரதினமான இன்று ஒரு தெருவில் சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற ஒருவரின் பெயர் இருந்ததால் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கருதினார்கள்.
ஆனால் அது நகராட்சி சார்பில் எழுதப்படவில்லை, யாரோ வேண்டுமென்றே வீர சாவர்க்கர் பெயரில் தெருவை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டது, உடனடியாக நகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர், வீர சாவர்க்கர் தெரு என்று எழுதப்பட்ட்டிருந்த வாசகம் வேறு பெயிண்ட் மூலம் அழிக்கப்பட்டது. இது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது,