கோவில்பட்டியில் சமபந்தி விருந்து; தி.மு.க., அ.தி.மு.க.வினர் பரிமாறினர்
இந்திய சுதந்திரதின விழாவை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சம்பந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினரும். நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.
வழக்கமாக இரு கட்சி நிர்வாகிகள் ஒரு இடத்தில் கலந்து கொண்டால் மோதல்உருவாக்கி பரபரப்பு ஏற்படுவது வழக்கம், ஆனால் இன்றைய சம்பந்தி விருந்து நிகழ்ச்சியில் இரு கட்சியினரும் கலந்து கொண்டாலும் எந்த வித மோதலும் இல்லாமல் அமைதியுடன் நடந்து கொண்டார்கள். கடம்பூர் ராஜூ சாதம் எடுத்து பரிமாற, கருணாநிதி குழம்பு ஊற்ரி, பொரியல் வைக்க என சமபந்தி விருந்து கலகலப்பாக முடிவடைந்தது.