• April 20, 2024

ஜாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி ஆண்டுவிழா

 ஜாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி ஆண்டுவிழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. முஹம்மது முஸ்தபா வரவேற்று கல்லூரி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக ஜனாப் முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி துறை சார்பாக ஆண்டறிக்கையை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார்.
விழாவில் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு, இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். விழா முடிவில் பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *