கஞ்சா எண்ணெய் விற்ற 3 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 32), சார்லஸ் (32), மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த படையப்பா (எ) அருண்குமார் (28) ஆகிய 3 பேரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்ததன்பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் . செந்தில்ராஜ், குறிப்பிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஆய்வாளர் ராஜாராம், மேற்படி 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.