வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்: விண்ணப்பங்கள் அனுப்ப ஆட்சியர் விஷு மகாஜன் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறரின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்றும் வகையில் சிறப்பான வீரதீரச் செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து 2027ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிறரின் உயிரைக் காப்பாற்றுதல், உடைமைகளைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது தமிழக முதலமைச்சரால் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விருதுகள் இணையதளமான https://awards.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2026.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டத்தில் வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.







