• November 28, 2026

கோவில்பட்டியில் 49 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பரில் மிக கனமழை பதிவு

 கோவில்பட்டியில் 49 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பரில் மிக கனமழை பதிவு

Oplus_16908288

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்தது. குறிப்பாக கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கோவில்பட்டியில் பெய்த கனமழையால் அண்ணா பஸ்நிலையம் முன்புள்ள மெயின் ரோட்டில் ஆறுபோல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மற்றும் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. புது ரோடு- மெயின் ரோடு சந்திப்பில் அதிக அளவு நீர் தேங்கியது.

 கோவில்பட்டி இளையாரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே  தரைப் பாலத்தில் தண்ணீர் பெருமளவு தொடங்கியதால் அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கோவில்பட்டியில் 49 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பரில் மிக கனமழை பதிவாகி உள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவில்பட்டியில் 1977-ம் ஆண்டிற்கு பிறகு, அதாவது 49 ஆண்டுகளுக்கு  பிறகு  நவம்பரில் மிக கனமழை (130 மி.மீ ) பதிவாகியுள்ளது. நவம்பர் மாத மழை வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச மழையையும் கோவில்பட்டி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாத அதிகபட்ச மழை நிகழ்வுகள்:-

10-11-1907 -கோவில்பட்டி -153.16 மி.மீ

23-11-1970 -கோவில்பட்டி – 140 மி.மீ

27-11-2026 – கோவில்பட்டி – 130 மி.மீ… 

9-11-1977 – கோவில்பட்டி – 123 மி.மீ

27-11-2011 – கோவில்பட்டி – 109 மி.மீ… 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *