மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் மனு கொடுக்க வந்த 17 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இரா. சிவ பிரசாத்திடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதேபோன்று அனைத்து காவல் உட்கோட்ட அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.







