• November 26, 2026

காங்கிரஸ் பிரமுகர் மீது டி.வி. நடிகரின் மனைவி ரூ.10 லட்சம் மோசடி புகார் 

 காங்கிரஸ் பிரமுகர் மீது டி.வி. நடிகரின் மனைவி ரூ.10 லட்சம் மோசடி புகார் 

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் டி.வி. நடிகர் முகமது குரேஷி. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். 

இவரது மனைவி, சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அந்த மனுவில், அவசர பணத் தேவை காரணமாக தன்னிடம் இருந்த 92.73 கிராம் எடையுள்ள தங்க நகைகளை காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரிடம் விற்பனை செய்வதற்காக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

தங்க நகைகளுக்கு ரூ.14 லட்சம் தருவதாக ரஞ்சன் குமார் உறுதியளித்ததாகவும், அதன்படி முதற்கட்டமாக ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கியதாகவும் 

மீதமுள்ள ரூ.10 லட்சத்தை பலமுறை கேட்டும் அவர் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *