தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் 0வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பின. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது மாவட்ட எஸ்பியிடம் கலெக்டர் புகார் அளித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த தகவலை அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக எம்.எல்.ஏவுக்கு எதிராக ஆட்சியரிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது வழ.க்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் தலைமை வழக்கறிஞர், கலெக்டரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தார். அப்போது எப்ஐஆரை ஆய்வு செய்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கை காவல்துறை இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு
இணையத்தில் பதிவேற்றம் செய்தால் வெளியில் கசிந்துவிட்டும் என்பதால் பதிவேற்றம் செய்யவில்லை என குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கலெக்டர் வழக்கில் யாரையும் பாதுகாக்க முயற்சிக்க கூடாது. அவ்வாறு செய்தால் தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார். கலெக்டர் புகார் விசாரணையை ஐஜி பிரவீன் குமார் அபிநபு
கண்காணிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் புகாரை விசாரிக்கும் பணியிட குழுவை (ICC) வெள்ளிக்கிழமைக்குள் அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், கலெக்டர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் உள்ள எம்.எல்.ஏ. அருள்
விக்னேஷின் வீட்டில் வைத்து உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு எஸ்.ஐ. யோகேஸ்வரன், கள்ளக்குறிச்சி உளவு பிரிவு போலீசார் ஒருவரும் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.இந்த நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமினில்
முடியாத பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS 75, 78, 79 மூன்று பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BNS 75 – ஜாமினில் வெளி வர முடியாத பிரிவு, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியில் அணுகுதல் பிரிவில் வழக்கு, BNS 78
– பெண்களின் விருப்பம் இல்லாமல் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்யும் பிரிவிலும், BNS 79 -ஆபாச செய்கை செய்தல் எனும் பிரிவிலும் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது….







