• November 23, 2026

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் உண்மை இருந்தால் நிச்சயம் கடும் நடவடிக்கை; அமைச்சர் அருண்ராஜ்

 கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் உண்மை இருந்தால் நிச்சயம் கடும் நடவடிக்கை; அமைச்சர் அருண்ராஜ்

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதை திரும்பவும் சொல்லி காட்ட விரும்பவில்லை. மக்களுக்கு தெரியும். கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறித்து பலமுறை நாம் பேசிவிட்டோம். இது முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்தில் இருக்கிறது. அது ஆராயப்பட்டு, உண்மை இருந்தால் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எல்.ஏ. பற்றி நீதிபதி பேசியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

திமுக எந்த அளவுக்கு ஒரு பாசிச மனப்பான்மையோடு இருக்கிறது என்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு காட்டுகிறது. சட்டசபையில் எதிர்வரிசையில் இருப்பவர்களுக்கு மூளையே இல்லாதவர்கள் என்று உதயநிதி பேசியிருக்கிறார். எந்தவிதமான மனநிலை இது. திமுகவுக்கு ஓட்டுப்போட்டவர்கள் அறிவார்ந்த மக்களா? திமுக ஓட்டுப்போடாதவர்கள் முட்டாள்களா?.

0 ஆண்டில் இல்லாத பெரிய அரசியல் புரட்சியை நாம் ஏற்படுத்தியுள்ளோம். திமுக எம்.எல்.ஏ.க்கள். ஒவ்வொருவரும், ரூ.50 கோடி செலவு செய்து விட்டு வந்துள்ளார்கள். இவர்கள்தான் அறிவாளிகளா? அவர்கள்தான் (திமுக) இந்த சமூகத்தின் நோய், சமூகத்தின் கேடு. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட வேண்டும் என்று மக்களை பழக்கப்படுத்தி வைத்துள்ளார்களே, இதுதான் சமூகத்தின் மிகப்பெரிய கேடு. இதில், இருந்து மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.

கண்டிப்பாக, சில பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அடிப்படை காரணங்களை சரி செய்தால் தான் தீர்வு கிடைக்கும். போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கு தனி படை அமைத்துள்ளோம். எங்களின் நோக்கம் உண்மையானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *