• November 23, 2026

ஜப்பானில் ஆசிய பாரா விளையாட்டு போட்டி: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நாகலாபுரம் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு

 ஜப்பானில் ஆசிய பாரா விளையாட்டு போட்டி: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நாகலாபுரம் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு

ஜப்பானில் நடைபெற்ற 5வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சோலைராஜ், இந்தியா சார்பில் பங்கேற்று

7.15 மீட்டர் தூரம் தாண்டி தங்க பதக்கம் வென்றுள்ளார்.  

     ஏ.குமராபுரத்தை சேர்ந்த டி.சோலைராஜ் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் 2010 – 2012 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 படிக்கும் போதே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்

         அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 18.11.26 அன்று தியாகி பழனிச்சாமி நினைவு அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நாகலாபுரம் பள்ளிவாசல் தெரு நாடார் உறவின்முறைத் தலைவர் ஜெ.மாரிக் கண்ணபிரான் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர். வி.தங்கமணி ஆகியோர் தலைமை தாங்கினர். 

    சென்னை உறவின்முறைச் செயலர் சி.ராமர்,பெரியதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

     பள்ளிச் செயலர் பேராசிரியர் பால்பாண்டியன் வரவேற்று பேசினார்

  முதுகலை ஆசிரியை உமா மகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் நர்மதா  ஆகியோர் வாழ்த்தி  பேசினர். 

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாதனை மாணவர்  சோலைராஜ் ஏற்புரை வழங்கினார். பயிற்சி, விடா முயற்சி தன்னம்பிக்கை மூலம் மாணவ மாணவியர் தங்களது திறமைகளை அடையாளம் கண்டு சாதிக்க வேண்டும் என மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தார்.

    பள்ளி நிர்வாகம் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப் பட்டது.

தேசிய மாணவர் படை முன்னாள் அதிகாரி ஜான் ஸ்டேனி நன்றி கூறினார்

முதுகலை ஆசிரியர் குணசேகரன் விழா நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி செய்திருந்தார். 

    பள்ளி நிர்வாகிகள் , WPAS சௌந்தர பாண்டியனார் படிப்பகம் மற்றும் காமராசர் மன்ற நிர்வாகிகள் ஆசிரிய – அலுவலர்கள் சாதனை மாணவரை பாராட்டினர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *