தமிழக சீனியர் பெண்கள் ஆக்கி அணி பயிற்சி முகாம்; கோவில்பட்டியில் தொடங்கியது

ஆக்கி இந்தியா சார்பாக ஆண்டுதோறும் 6 தேசிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்- வீராங்கனைகளை தேர்வு செய்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்படுவது வழக்கம்.
அது போல் இந்த ஆண்டு சீனியர் பெண்கள் தேசிய ஆக்கி போட்டி கொல்கத்தாவில் டிசம்பர் 17 முதல் 26 வரை நடக்க உள்ளது இப்போட்டியில் தமிழக சீனியர் பெண்கள் ஆக்கி அணி விளையாட இருப்பதால் அணியை தேர்வு செய்வதற்காக மாநில போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 30 வீராங்கனைகளை முதற்கட்ட பயிற்சி 20.11.2026 அன்று கோவில்பட்டியில் தொடங்கியது.

பயிற்சி முகாம் தினமும் காலையும் மாலையும் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெறும்.
இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகளை தேர்வு செய்து சென்னையில் டிசம்பர் 5ஆம் தேதி தொட ங்கும் இரண்டாம் கட்ட பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படுவர். பின்னர் 18 வீராங்கனைகளை கொண்ட தமிழக சீனியர் பெண்கள் ஆக்கி அணி கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய ஆக்கி போட்டியில் விளையாட அழைத்து செல்லப்படுவர்.
தமிழக ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக உதயகுமார், துணை பயிற்சியாளராக லதா, வீடியோ பகுப்பாய்வாளராக மாலினி , அணியின் மேலாளராக அமுதா, ஆகியோர் செயல்படுகின்றனர்

பயிற்சி முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே மனோகரன் பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தேர்வு குழு தலைவர் குரு சித்ர சண்முக பாரதி, ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா ஆகியோர் செய்து வருகிறார்கள்







