• November 22, 2026

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணியில் இடம்பெற்ற நாகாலபுரம் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணியில் இடம்பெற்ற நாகாலபுரம் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 

 சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் நடத்தும் தென்மண்டல அளவிலான அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி  சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில்   நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற உள்ளது

இப்போட்டியில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணி கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றதால் இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் நேரடியாக கால் இறுதி போட்டியில் கலந்து கொண்டு விளையாட தகுதி பெற்றுள்ளது.

 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணியை பல்கலைக்கழக விளையாட்டுத்துறை தலைவர் ஆறுமுகம்,18 பேர் கொண்ட ஆக்கி அணி வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.

 இதில் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு தமிழ் துறை மாணவர்கள் முத்துக்குமார், மற்றும் சீனிவாசன், முதலாம் ஆண்டு கணிதத்துறை மாணவர் திவாகர், ஆகிய மூன்று வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

 தேர்வு பெற்றுள்ள 3 வீரர்களையும் கல்லூரியின் முதல்வர்  ராமலிங்கம் தலைமையில்  கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஆல்டிரின் அதிசயராஜ், பேராசிரியர்கள் முனியசாமி ,  விஜயலக்ஷ்மி, செல்வி , சுரேஷ் பாண்டி 

மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினர். 

மேலும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர்  குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் ராஜா ஆகியோரும் வாழ்த்து கூறி பாராட்டினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *